Home நாடு சீ பீல்ட்: சட்டத்திற்கு உட்பட்டே நிலப் பிரச்சனை தீர்க்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார்

சீ பீல்ட்: சட்டத்திற்கு உட்பட்டே நிலப் பிரச்சனை தீர்க்கப்படும் – சிலாங்கூர் மந்திரி பெசார்

812
0
SHARE
Ad

ஷா அலாம்: சட்டத்திற்கு உட்பட்டு சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பிரச்சினையை தீர்க்க அனைத்து தரப்பினருக்கும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நினைவூட்டினார்.

இது குறித்துப் பேசிய அவர், கோடீஸ்வரர் வின்சென் டான் கோயில் நிலத்தினை வாங்குவதற்கு 2 மில்லியன் ரிங்கிட் நன்கொடை திரட்டப்பட்டுவிட்டதாகக் கூறியதைக் குறிப்பிட்டார்.

அப்படி ஒரு வேளை நிலம் வாங்கும் நிலைமை ஏற்பட்டால் சட்டத்தின் கீழ் சில நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டியிருக்கும் என அவர் கூறினார். இக்கோயில் விவகாரத்தில் மாநிலம் நடுநிலையாக செயல்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் பேசிய அமிருடின், நிலத்தினை விற்பதற்கு நில உரிமையாளரிடமிருந்து இதுவரையிலும் எவ்வித பதிலும் பெறப்படவில்லை என்றார். எல்லா நேரங்களிலும் எல்லோரையும் சந்தோசப் படுத்த இயலாது, ஆனால், இவ்விவகாரம் குறித்து சிறந்த ஒரு முடிவினை மாநில அரசாங்கம் எடுக்கும் என அமிருடின் உறுதி அளித்தார்.