Home நாடு கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது!

கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது!

1419
0
SHARE
Ad

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி சார்பாக களம் இறங்க இருக்கும் வேட்பாளரை நேற்று அக்கூட்டணி அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் சற்று ஆட்டம் கண்டுள்ளதாக ஐசெக கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார். இதனை அடுத்து, கேமரன் மலையில், நம்பிக்கைக் கூட்டணி தரப்பு கடுமையாக உழைத்தாக வேண்டியுள்ளது எனவும் நிதி அமைச்சருமான லிம் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணிக் கூட்டணியைப் பிரதிநிதித்து, முன்னாள் காவல் துறை அதிகாரியான ரம்லி முகமட் நூர் போட்டியிடுகிறார். இவர் பூர்வக்குடி இனத்தைச் சார்ந்தவர் என்றபடியால், மலாய் மற்றும் பூர்வக்குடியினரின் வாக்குகள் இவருக்குச் சாதமாக அமையும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கேமரன் மலையில் மொத்தம் 22 விழுக்காடு பூர்வக்குடி வாக்காளர்கள் இருக்கும் வேளையில், இம்மலை வாழ் பூர்வக்குடியினரின் அனைத்து வாக்குகளும் அவருக்குச் சாதகமாக அமையும் என அம்னோ நடப்புத் தலைவரான முகமட் ஹசான் கருதுகிறார்.

ரம்லி, பலம் வாய்ந்த வேட்பாளர் என்றுக் கூறிய லிம், தேர்தல் என்று வரும் பொழுது மக்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளரை மட்டும் பார்க்காமல், அவர் பிரதிநிதிக்கும் கூட்டணியையும் கவனிப்பர் எனக் கூறினார்.

கேமரன் மலை இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து பகாங் மாநில ஐசெக கட்சித் தலைவர் எம். மனோகரன் களம் இறங்க இருக்கும் வேளையில், முன்னாள் துணை அமைச்சர் எம். கேவியஸ்ஸும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.