Home வணிகம்/தொழில் நுட்பம் பிரெக்சிட் : பிரிட்டன் கார் திட்டத்தை இரத்து செய்கிறது நிசான்

பிரெக்சிட் : பிரிட்டன் கார் திட்டத்தை இரத்து செய்கிறது நிசான்

837
0
SHARE
Ad

இலண்டன் – பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படப் போகும் தாக்கத்தின் ஒரு முன்னோடியாக இங்கிலாந்தில் புதிய இரகக் கார் ஒன்றைத் தயாரிக்கும் தனது திட்டத்தை ஜப்பானின் நிசான் (Nissan) கார் நிறுவனம் இரத்து செய்திருக்கிறது.

தனது புதிய எக்ஸ்-டிரெயில் (X-Trail) இரகக் கார்களை இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்ட் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கவிருப்பதாக 2016-இல் நிசான் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது பிரெக்சிட் திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் குழப்ப சூழ்நிலையைத் தொடர்ந்து தனது கார் தயாரிக்கும் அந்தத் திட்டத்தை இரத்து செய்வதாக நிசான் கார் நிறுவனம் அறிவித்திருக்கிறது.