கோலாலம்பூர்: உலகளாவிய அளவில் மலேசியா, 95 மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்டர்நேஷனல் லிவிங் இணையத்தளத்தில் இது குறித்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவில் அமைந்துள்ள 13 மருத்துவமனைகள், அனைத்துலக கூட்டு ஆணையத் (Joint Commission International) தகுதியை பெற்றிருப்பதோடு, பெரும்பாலான மருத்துவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயிற்சிப்பெற்றவர்கள் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
மேலும், இம்மருத்துவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் செய்வதால் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனைகள் இல்லாது இருப்பதாக அது பதிவிட்டுள்ளது.