Home நாடு செமினி: “பாஸ்க்கு” ஆரவாரத்துடன் தெஸ்கோ விற்பனை மையத்தில் நஜிப்!

செமினி: “பாஸ்க்கு” ஆரவாரத்துடன் தெஸ்கோ விற்பனை மையத்தில் நஜிப்!

750
0
SHARE
Ad

செமினி: நேற்றிரவு (புதன்கிழமை) செமினியில் உள்ள தெஸ்கோ விற்பனை மையத்திற்கு வருகை மேற்கொண்டிருந்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை “பாஸ்க்கு” (Bossku) என முழக்கமிட்டு மக்கள் வரவேற்றனர்.

இதற்கிடையே, பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, நஜிப்பை ‘பென்சூரிக்கு’ (pencuriku) என கிண்டல் செய்தது, குறித்துக் குறிப்பிட்ட நஜிப், தாம் மக்களின் இதயத்தைத் திருடிய திருடன் என பதிலடிக் கொடுத்தார்.

நேற்றிரவு 8:30 மணியளவில் தெஸ்கோ விற்பனை மையத்தை வந்தடைந்த நஜிப்பிற்கு, அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் “மாலு அப பாஸ்க்கு” (Malu apa Bossku) என முழக்கமிட்டு வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

செமினி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணி வேட்பாளரை இன்று வியாழக்கிழமை, அக்கூட்டணி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.