Home நாடு அம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்!

அம்னோ, பாஸ் கட்சி கூட்டணி விரைவுப்படுத்த வேண்டும்!

788
0
SHARE
Ad

கோத்தா பாரு: பாஸ் கட்சி உடனான உறவு, இனி வரும் காலங்களில் வலுவானதாக அமைய வேண்டும் என கிளந்தான் அம்னோ கட்சி விருப்பம் தெரிவித்துக் கொண்டது. குறிப்பிட்ட ஒரு புரிதலுக்கான கூட்டமைப்பாக மட்டும் இல்லாமல், அரசியல் கூட்டணியாக இருக்க வேண்டும் என கிளந்தான் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ அகமட் ஜாஸ்லான் யாகோப் தெரிவித்தார்.

தமது இந்த விருப்பத்தைக் குறித்து, கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாயிட் ஹமிடியிடம் மனு ஒன்றை ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழலில் வலுவான கூட்டணி ஒன்று தேவைப்படுவதாகவும், இனம் மற்றும்  மதம் போன்ற விவகாரங்களில் அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்ட காரணத்தினாலும், அம்னோ, பாஸ் கட்சியின் கூட்டணி அவசியமாகிறது என அவர் தெரிவித்தார்.