Home நாடு செமினி: வேட்புமனு தாக்கல் முடிவுற்றது, நான்கு முனை போட்டி!

செமினி: வேட்புமனு தாக்கல் முடிவுற்றது, நான்கு முனை போட்டி!

771
0
SHARE
Ad

(கூடுதல் தகவலுடன்) செமினி: செமினியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை முன்னிட்டு, இன்று சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. காலை 9:00 மணியளவில், காஜாங் ஶ்ரீ செம்பாகா மண்டபத்தில் திறக்கப்பட்ட, வேட்புமனு தாக்கல் நிலையத்தில், காலை 10:00 மணி வரையிலும் நால்வர் வேட்புமனு தாக்கலை சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆளும் கட்சியான, நம்பிக்கைக் கூட்டணி அரசைப் பிரதிநிதித்து அய்மான் சாய்னாலி, தேசிய முன்னணி சார்பில் சாகாரியா ஹனாபி, பிஎஸ்எம் கட்சி சார்பாக நிக் அசிஸ் ஆகியோர் தங்களது வேட்புமனுவை ஒப்படைத்த வேளையில், சுயேச்சை வேட்பாளராக ‘அங்கல் கெந்தாங்’ என அழைக்கப்படும் குவான் சி ஹெங் தனது வேட்புமனுவை சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, காலை 10:25 மணியளவில், செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுவதை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் (57 வயது) மாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்து, வருகிற மார்ச் 2-ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.