Home நாடு “சூடு அதிகமாக இருந்தால், ஆற்றில் இறங்கி குளிக்கவும்”- நஜிப்

“சூடு அதிகமாக இருந்தால், ஆற்றில் இறங்கி குளிக்கவும்”- நஜிப்

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: செமினி சட்டமன்றத்தில் தமது வருகையைப் பார்த்து நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களும் ஆதரவாளர்களும் கோபம் கொள்ள வேண்டாம் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது முகநூல் பக்கத்தில் சீண்டியுள்ளார்.  “அப்படி சூடு அதிகமாக இருந்தால், ஆற்றில் இறங்கி குளிக்கவும்” எனக் கிண்டல் செய்துள்ளார்.

தாம் தற்போது, எந்தவொரு உயர் பதவியிலும் இல்லை என்றும், வருகிற செமினி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நஜிப்பை குறித்து துண்டுப் பிரசுரங்கள் செமினியில் பரவலாக மக்களுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சிற்றேடுகளில், நஜிப் ஒரு திருடர், துரோகி, கொள்ளைக்காரர் என அச்சிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

தம்மை குறி வைத்து தாக்குவது, எந்நாளும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, மக்களின் வாழ்க்கை செலவினங்களைக் குறைக்கவோ உதவப் போவதில்லை என அவர் சாடியுள்ளார்.

இதற்கிடையே, செமினி சட்டமன்றத்தில் நஜிப்பின் வருகை, நம்பிக்கைக் கூட்டனியை ஆட்டம் காணச் செய்துள்ளது என நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அய்மான் சாய்னாலி நேற்று (திங்கட்கிழமை) குறிப்பிட்டிருந்தார்.