Home நாடு அரசியலைக் காட்டிலும் வாழ்க்கை செலவினங்கள் மக்களை துரத்துகிறது! -அன்வார்

அரசியலைக் காட்டிலும் வாழ்க்கை செலவினங்கள் மக்களை துரத்துகிறது! -அன்வார்

1087
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்நாட்டு மக்கள் நாட்டிலுள்ள அரசியல் விவகாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதை விட, அவர்களின் வாழ்க்கை செலவினங்கள் குறித்து அதிக அக்கறைக் காட்டுகின்றனர் என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அரசியல்வாதிகள், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால், அந்த அரசியல்வாதிகள் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என அவர் கூறினார்.

பிரதமர் மகாதீர் முகமட்டின் ஆட்சியைக் கவிழ்பதற்காக நம்பிக்கைக் கூட்டணிக்குள் சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என பாஸ் கட்சி பகிரங்கமாக வெளியிட்டதற்குப் பின்னர் அன்வார் மீதான மக்களின் பார்வை திசை மாறி உள்ளது.