இஸ்லாமாபாத்: நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மணி 3:30 மணியளவில் (இந்திய நேரம்) இந்திய வான்படை விமானங்கள், பாகிஸ்தான் – இந்தியா எல்லையோரமாக அமைந்திருக்கும் தீவிரவாதிகளின் முகாமில் 1000 கிலோ வெடிகுண்டை வீசியது.
அதனை அடுத்து, இந்திய வான்வெளியை அத்து மீறி நுழைந்ததாகக் கூறி பாகிஸ்தானின் எப்16 ரக விமானத்தை இந்திய வான்படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய அரசு கூறியது. இதற்கு முறனாக, பாகிஸ்தான் இராணுவம் இந்திய வான்படையின் இரு விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், விமானி ஒருவரை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தேசிய கட்டளை ஆணையம் (National Command Authority) எனப்படும் என்.சி.ஏவின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
எவ்விதமான தாக்குதல்கள் ஏற்பட்டாலும், குறிப்பாக அணு ஆயுதத் தாக்குதல்கள் ஏற்பட்டால் எவ்வாறு அதற்கு பதிலடி தருவது என்பதை இந்த குழுவை தீர்மாணிக்கும். பாலகோட் தாக்குதலுக்குப் பின்பு எம்மாதிரியான முடிவுகளையும் எடுப்பதற்கு பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது என்பதை இக்கூட்டம் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.