கிரிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு அருகிகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரையிலும் 49 பேர் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தின் காவல் துறை ஆணையர் மைக் புஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். நாட்டின் பாதுக்காப்பிற்கு விழைக்கப்பட்ட கொடுரச் செயலாக இதனைக் கருதுவதாக நியூசிலாந்தின் பிரதமர் ஜசிண்டா குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த வேளையில், மேலும் 39 பேர் அதற்கு பின்னர் உயிர் இழந்துள்ளதாக மைக் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நால்வரை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளதுள்ளனர்.
28 வயது நிரம்பிய ஆஸ்திரேலியநாட்டவரான பிரெண்டன் தாராண்ட், இந்த சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த ஆடவன் பயணம் செய்த காரில் இரு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றில் ஒன்றை காவல் துறையினர் செயலிழக்கச் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மலேசியாவைச் சேர்ந்த இருவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முகமட் தார்மிசி சுயிப் எனப்படும் அந்த ஆடவருக்கு, சம்பவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், தர்மிசியின் மகனின் நிலவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் ஐந்து மலேசியர்கள் தொழுகைக்காக அப்பள்ளிவாசலுக்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.