Home உலகம் சக்திவாய்ந்த புயல் மற்றும் வெள்ளத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்!

சக்திவாய்ந்த புயல் மற்றும் வெள்ளத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம்!

804
0
SHARE
Ad

மாபுதோ: சக்திவாய்ந்த புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மொசாம்பிக்கில் 1,000 பேர் வரை இறந்திருக்கலாம் என ஜனாதிபதி பிலிப் நுயூசி கடந்த திங்களன்று கூறியிருந்தார்.

இது வரையிலும் 100 பேர் வரையிலும் உயிர் இழந்திருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருந்தாலும், நடப்பு நிலவரத்தைப் பார்க்கும் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அவர் தெரிவித்தார். ஒரு சில கிராமங்கள் காணாமல் போய்விட்டதாகவும், உடல்கள் தண்ணீரில் மிதந்துக் கொண்டிந்ததாகவும் அதிபர் கூறினார்.

இந்த இயற்கை சீற்றத்தினால் தொலைத் தொடர்பு பாதிக்கப்பட்டதோடு, பல்வேறு பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைய கால தாமதம் ஏற்படுவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இன்னும், சில நாட்களில் நிலைமை மோசமடையும் வாய்ப்புகள் உள்ளது எனவும், இறந்தவர்களின் உடல்களை குறிப்பிட்ட நேரத்தில் அப்புறப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் எனக் கூறினர்.