Home நாடு ஊழலைத் தடுக்க சிறப்பு நீதிமன்றம் நிறுவப்படும்!- பிரதமர்

ஊழலைத் தடுக்க சிறப்பு நீதிமன்றம் நிறுவப்படும்!- பிரதமர்

646
0
SHARE
Ad

புத்ராஜெயா: ஊழல் வழக்குகளை விரைவுப்படுத்த, சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அரசாங்கம் அமைக்கும் என பிரதமர் மகாதீர் முகமட் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.  இத்தகைய நீதிமன்றங்கள் நிறுவப்படுவதால் தவறான நடத்தை போன்ற வழக்குகள் முடுக்கிவிடப்படும் என்று பிரதமர் கூறினார். ஆயினும், இது ஆரம்பக் கட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

ஊழலைத் தடுப்பதற்கு அரசாங்கத்தின் முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான நீதிமன்றங்களிலும் இம்மாதிரியான வழக்குகள் நடக்கும்எனவும், இதர நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணையை, ஊழல் நீதிமன்றங்கள் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஊழல் சம்பந்தமான வழக்குகளை நாம் விரைவில் கையாள ஒரு சிறப்பு நீதிமன்றம் வேண்டும்,” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், ‘மலேசியா பெர்சே’ பாடல் இனி, எல்லா அரசாங்க நிகழ்ச்சிகளிலும் ‘நெகாராகூ’ பாடலுக்குப் பிறகு ஒலிபரப்ப வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.