Home நாடு மக்களவைத் துணைத் தலைவர் மீது சட்ட நடவடிக்கை!- அம்னோ

மக்களவைத் துணைத் தலைவர் மீது சட்ட நடவடிக்கை!- அம்னோ

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் ஆட்சியின் விளைவாக மலேசியா ஒரு தலிபான் நாடாக உருமாறும் என பேராக் ஜசெக கட்சியின் தலைவர் ங்கா கொர் மிங் கூறியதற்கு, அம்னோ அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக அம்னோ கட்சியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான, வேளைகளை தொடங்கி விட்டதாகவும், தகுதியான சட்ட நிறுவனத்தை தேர்ந்தெடுத்து வழக்கு தொடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு கூறியதற்கு, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் அவரை மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும், அதற்கான தேவை இல்லை என ங்கா மன்னிப்புக் கேட்க மறுத்தார்.

நாடாளுமன்றத்தில் இது விவகாரமாக குரல் எழுப்பப்பட்டபோதும், மக்களவைத் துணைத் தலைவருமான ங்கா அவரின் அந்த கூற்றுக்கு மன்னிப்புக் கேட்க போவதில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.