Home நாடு 2018-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு கூடுதல் 15.5 பில்லியன் ரிங்கிட் விண்ணப்பம்!

2018-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்திற்கு கூடுதல் 15.5 பில்லியன் ரிங்கிட் விண்ணப்பம்!

742
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட, 2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு கூடுதலாக 15.5 பில்லியன் ரிங்கிட் வரவுசெலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

2018-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மேம்பாட்டுச் செலவினங்களுக்காக இக்கூடுதல் 15.5 பில்லியன் ரிங்கிட் நிதியை அரசாங்கம் விண்ணப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் பிரதமர் நஜிப்பின் காலத்தில், 46 பில்லியன் ரிங்கிட் வரவு செலவுத் திட்டத்தின் மேம்பாட்டு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கருவூலத்திற்கு சுமார் 9.2 பில்லியன் ரிங்கிட்டும், பொதுப் பணி அமைச்சுக்கு சுமார் 1.97 பில்லியன் ரிங்கிட்டும், இந்த துணைவரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த துணைவரவுசெலவுத் திட்டத்தில் அதிகபடியாக நிதியைப் பெற இருக்கும் அமைச்சுகளாக இவை குறிப்பிடப்பட்டுள்ளன.