Home நாடு மலேசிய சமுதாயத்தைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத ஜாகிரை அரசாங்கம் கொண்டாடுவது ஏன்?

மலேசிய சமுதாயத்தைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லாத ஜாகிரை அரசாங்கம் கொண்டாடுவது ஏன்?

1987
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை கடந்த வெள்ளிக்கிழமை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக்எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களின் நலனுக்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட சுமார் 113 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள நன்கொடைகளை, ஜாகிர் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   இது குறித்து கருத்துரைத்த முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் அம்பிகா சீனிவாசன், இப்பேர்பட்டவரை மலேசிய அரசாங்கம் தற்காக்கும் நோக்கத்தை தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

“ஜாகிர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தீவிரமானவை” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தகுதிகள் இருந்தும், பிறப்புச் சான்றிதழை கூட பெற முடியாமல் இங்கு பிறந்த குழந்தைகள் பலர் உள்ள வேளையில், இம்மாதிரியான தனிநபருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவது சரியான ஒன்றல்ல என அவர் சாடினார்.

மற்ற மதங்களைத் தாழ்த்திப் பேசும், அதுவும் மலேசிய சமுதாயத்தைப் பற்றிய அறிவே இல்லாத ஒரு வெளிநாட்டவரை மலேசிய அரசாங்கம் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? இந்நாட்டின் அரசியலமைப்பிற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லாத பட்சத்தில், அவர் எப்படி பிற மதங்களுக்கு மரியாதை செலுத்துவார்?” என அவர் கேள்விகள் எழுப்பினார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே, ஜாகிரை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கண்காணித்து வந்ததுவங்காளதேசத்தில் உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டுள்ளவர்களில் ஜாகிரும் ஒருவர் என குறிப்பிடப்படுகிறதுஅந்த சம்பவத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதத் தொடர்புடைய நடவடிக்கைகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்காகஇந்திய அரசு ஜாகிரை ஒப்படைக்குமாறு மலேசிய அரசை வலியுறுத்தி வந்தாலும்ஜாகிருக்கு மலேசியாவில் குடியுரிமை வழங்கப்பட்டு இருப்பதை இந்தியா அமலாக்கப் பிரிவு சுட்டிக் காட்டி உள்ளது