Home நாடு ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

ரந்தாவ்: டாக்டர் ஶ்ரீராம் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார்- அன்வார்

775
0
SHARE
Ad

ரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ். ஶ்ரீராம் வெற்றிக் கண்டால், அவர் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதிப்பார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். கடந்த 20 வருடங்களாக பிகேஆர் கட்சி, இதனையே நடைமுறைப்படுத்தி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது டாக்டர் ஶ்ரீராமுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகவே, இம்முறை, மலாய் சமூகத்தினர் பெரும்பான்மையராக இருக்கிற ரந்தாவில் அவரை வேட்பாளராக கட்சி அறிவித்துள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார். 

எங்கள் (பிகேஆர்) மீது வைத்த நம்பிக்கையை நாங்களே கெடுக்க முடியாது. அதனால்தான் இந்திய வேட்பாளரான ஶ்ரீராமை, இத்தொகுதியில் நிறுத்தி உள்ளோம்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி, மற்றும் வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபூடின் அப்துல்லா ஆகியோர் இந்த பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டனர்.