கோலாலம்பூர்: அண்மையில், ஜோ லோவுக்குச் சொந்தமான இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலை கெந்திங் மலேசியாவிற்கு விற்ற மாதிரியே மேலும் சில அரசு சொத்துகள் மலேசியர்களிடமே விற்கப்படலாம் என பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.
இந்த செயல்முறை தேசியக் கடன்களைச் சமாளிக்கும் என அவர் குறிப்பிட்டார். மலேசிய இழந்த பணங்களை சிங்கப்பூரிடமிருந்து பெற்றுள்ளதாகவும், இது குறித்த தகவலை நிதி அமைச்சர் தெரிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
“நம்மிடம் மேலும் சில நிலம் உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவற்றை விற்றால், நாட்டின் கடனை ஓரளவுக்கு சமாளிக்க இயலும்” என கூறிய பிரதமர், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு தாம் செவிசாய்க்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். அவர்களின் காலத்தில், நாட்டின் நிலங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்ற போது இல்லாத, அக்கறை இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது எனக் கேள்வி எழுப்பினார்.