Home நாடு சண்டாக்கானில் மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல்!

சண்டாக்கானில் மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல்!

672
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் தியேன் பாட் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் வருகிற மே 11-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வேட்புமனுத் தாக்கல் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி நடத்தப்பட இருக்கும் வேளையில், மே 7-ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

கடந்த மார்ச் 28-ஆம் தேதி, சபாவின் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சருமான வோங் மாரடைப்புக் காரணமாக காலமானதைத் தொடர்ந்து சண்டாக்கானில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலின் போது, வோங் 19,094 வாக்குகளைப் பெற்று தேசிய முன்னணியின் லிம் மிங் ஹொவை தோற்கடித்தார்.