Home இந்தியா மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய சோனியா உத்தரவிட வேண்டும்: யஷ்வந்த் சின்கா வலியுறுத்தல்

மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய சோனியா உத்தரவிட வேண்டும்: யஷ்வந்த் சின்கா வலியுறுத்தல்

487
0
SHARE
Ad

manmohan-singhபுதுடில்லி, ஏப்.3-பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்ந்து பதவியில் நீடிக்க விட சோனியா அனுமதிக்கக் கூடாது; அவரை, உடனடியாக, பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும், என, பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் பொருளாதார நிர்வாகிகள், மிக மோசமாக செயல்பட்டதால், கடந்த நான்காண்டுகளாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் மிக மோசமான செயல்பாடுகளால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை சரி செய்ய, ஒரே வழி, இந்த அரசு வெளியேற வேண்டும்; புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்த அரசால் மேற்கொள்ள முடியாத பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை, புதிதாக பொறுப்பேற்கும் அரசு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, காங்கிரஸ் தலைவர், சோனியா, உடனடியாக, பிரதமர், மன்மோகன் சிங்கை, பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும். இதற்கான உத்தரவை, சோனியா பிறப்பிக்க வேண்டும் என, அவரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். லோக்சபாவில், எதிர்க்கட்சிகளுக்கு போதிய பலம் இருக்கிறதோ இல்லையோ,
அதுபற்றி கவலையில்லை. மக்களுக்கு, இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை; மக்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்து விட்டது; முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் இழந்து விட்டது.
நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை, 6.7 சதவீதத்தை தொட்டு விட்டது. அடுத்து வருபவர்களுக்காவது, பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை இதன் மூலம் வழங்க வேண்டும். அடுத்த ஆண்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என, நிதியமைச்சர், சிதம்பரம் கூறுவது போல நடக்காது; மேலும் மோசமாகத்தான் செய்யும் என்றார்.

#TamilSchoolmychoice

மேலும் ஸ்பெட்க்ரம் 2 ஜி வழக்கில் பிரதமரும், நிதியமைச்சரும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்ற செய்தியும் தற்போது கசிந்துள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை மெளனம் சாதித்து வருகின்றனர். ஆதலால் இந்தக் காரணத்தையெல்லாம் முன் வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.