Home 13வது பொதுத் தேர்தல் மூவார் தொகுதியின் பிகேஆர் வேட்பாளர் நோர் ஹிஸ்வான் அகமட்

மூவார் தொகுதியின் பிகேஆர் வேட்பாளர் நோர் ஹிஸ்வான் அகமட்

1012
0
SHARE
Ad

Nor-Hizwan-Ahmad-PKR-Muar-Sliderஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – மூவார் நாடாளுமன்ற தொகுதியின்  பிகேஆர் கட்சி வேட்பாளராக நோர் ஹிஸ்வான் அகமட்டை, கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

நேற்று ஜோகூர்பாருவில் உள்ள கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டணி தலைவர்களோடு கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.

மூவாரைப் பிறப்பிடமாகக் கொண்ட நோர் ஹிஸ்வான் முன்பு மாஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றியவர். அம்பாங் பிகேஆர் தொகுதியில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர் பின்னர் மூவார் நாடாளுமன்றத் தொகுதியின் பிகேஆர் கட்சி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது மூவார் தொகுதியின் நடப்பு உறுப்பினராக இருக்கும் தேசிய முன்னணி-அம்னோவின் ரசாலி இப்ராகிம் கடந்த 2008 பொதுத் தேர்தலில் 4,661 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்த முறை 48,334      வாக்குகளைக் கொண்ட மூவார் தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்கள் 62 சதவீதமும், சீன வாக்காளர்கள் 35 சதவீதமும் இருக்கின்றனர். இந்தியர்கள் 1 சதவீதமே இருக்கின்றனர்.

ஜோகூரில் 50 சதவீத மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவை பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் இணைந்து பெற்றால், சீன வாக்காளர்களின் துணையோடு ஒரு சில முக்கிய நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் கூட்டணி வெல்லக் கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

அந்த வகையில் மூவார் தொகுதியில் கடந்த தேர்தலை விட ஏறத்தாழ 2,000 வாக்குகளை கூடுதலாகப் பெற்றால் மக்கள் கூட்டணி இந்ததொகுதியை எளிதாக வெல்ல முடியும்.