Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவின் போட்டியால் திணறும் எட்டு இந்திய பொருட்கள்

சீனாவின் போட்டியால் திணறும் எட்டு இந்திய பொருட்கள்

884
0
SHARE
Ad

large_1364327875புதுடில்லி, ஏப்.3-சீனப் பொருட்களின் இறக்குமதியால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது’ என, இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, நாடாளுமன்றத்தில்  தெரிவித்தார்.

இந்தியாவில், எட்டு முக்கிய துறைகளில், சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், சீனாவின் கடும் போட்டியை எதிர்கொண்டு உள்ளன.

சென்ற 2011 -12ம் நிதியாண்டில், ஒட்டுமொத்த சீனப் பொருள்களின் இறக்குமதியில், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள், பொறியியல் மற்றும் உலோகவியல் பொருட்கள், ரசாயனம், கண்ணாடி, செராமிக் அடிப்படையிலான பொருட்கள் ஆகியவற்றின் பங்களிப்பு, 54 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், இவ்வகை பொருட்களை தயாரிப்பதில், சிறு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 2008 -09 முதல் 2011-12ம் நிதியாண்டு வரை, அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியான எட்டு துறை சார்ந்த பொருள்களின் அளவை விட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அதிகம் என, வர்த்தக நுண்ணாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

குறைந்த மூலதனம், பன்னாட்டு சந்தையில் போதுமான பங்களிப்பை வழங்க இயலாமல் உள்ளது போன்ற சவால்களையும், இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் நிலை உள்ளது.

இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில்,  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.12வது ஐந்தாண்டு திட்டத்தில் (2012- 17), சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கு, 24,124 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டக் குழு அனுமதி அளித்துள்ளது.

ஏற்றுமதி:இத்தகைய நடவடிக்கைகள், உள்நாட்டு நிறுவனங்கள், போட்டியை எதிர் கொண்டு வளர்ச்சி காணவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் துணை புரியும்.

ஏற்றுமதியை அதிகரிக்க, சந்தை மேம்பாட்டு உதவி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய சிறுதொழில் வளர்ச்சி கழகம், காதி மற்றும் கிராம தொழில் கழகம், கயிறு வாரியம் போன்ற அமைப்புகள் வாயிலாகவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சீனப் பொருட்களின் இறக்குமதியால், இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிட்டுள்ளது’ என, இத்துறைக்கான மத்திய இணை அமைச்சர் கே.எச்.முனியப்பா, பார்லிமென்டில் தெரிவித்தார்.
மின்னணு சாதனங்கள்: அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவில், எட்டு முக்கிய துறைகளில், சிறிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், சீனாவின் கடும் போட்டியை எதிர்கொண்டு உள்ளன. சென்ற 201112ம் நிதியாண்டில், ஒட்டுமொத்த சீனப் பொருள்களின் இறக்குமதியில், மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள், பொறியியல் மற்றும் உலோகவியல் பொருட்கள், ரசாயனம், கண்ணாடி, செராமிக் அடிப்படையிலான பொருட்கள் ஆகியவற்றின் பங்களிப்பு, 54 சதவீதமாக உள்ளது. இந்தியாவில், இவ்வகை பொருட்களை தயாரிப்பதில், சிறு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
கடந்த 200809 முதல் 201112ம் நிதியாண்டு வரை, அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதியான எட்டு துறை சார்ந்த பொருள்களின் அளவை விட, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அதிகம் என, வர்த்தக நுண்ணாய்வு மற்றும் புள்ளியியல் தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
பங்களிப்பு:குறைந்த மூலதனம், பன்னாட்டு சந்தையில் போதுமான பங்களிப்பை வழங்க இயலாமல் உள்ளது போன்ற சவால்களையும், இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் நிலை உள்ளது.இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக, அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.12வது ஐந்தாண்டு திட்டத்தில் (201217), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கு, 24,124 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டக் குழு அனுமதி அளித்துள்ளது.
ஏற்றுமதி:இத்தகைய நடவடிக்கைகள், உள்நாட்டு நிறுவனங்கள், போட்டியை எதிர் கொண்டு வளர்ச்சி காணவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் துணை புரியும்.ஏற்றுமதியை அதிகரிக்க, சந்தை மேம்பாட்டு உதவி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேசிய சிறுதொழில் வளர்ச்சி கழகம், காதி மற்றும் கிராம தொழில் கழகம், கயிறு வாரியம் போன்ற அமைப்புகள் வாயிலாகவும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.