கோலாலம்பூர்: மலேசிய வடக்கு மாநில பல்கலைக்கழகத்திற்கு (யூயூஎம்) ஜாகிர் நாயக்கை அழைத்து பேச வைக்க எல்லா விதமான உரிமையும் உண்டு என துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். சர்ச்சைக்குரிய அந்த மதப் பேச்சாளரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், முன்னாள் அரசாங்கமும், தற்கால அரசாங்கமும் பின்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், ஜாகிர் நாயக்கின் முக்கிய நம்பகமான உதவியாளரை மும்பாய் அமலாக்கப் பிரிவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அப்துல் காதிர் நஜ்முடின் சதாக், எனப்படும் நகை வியாபாரி பண மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
முஸ்லிம்களின் நலனுக்காக இஸ்லாமிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட சுமார் 113 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள நன்கொடைகளை, ஜாகிர் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள வேளையில் இவருக்கு எதிரான கருத்துகள் எழுந்து வந்தாலும், அரசாங்கம் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை.
இதற்கிடையே, அடுத்த வாரம் வியாழனன்று யூயூஎம்மில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள் அமைச்சரை வினவிய போது, பல்கலைக்கழகத்திற்கு இதில் முழு உரிமையும் உண்டு எனவும், அவர்கள்தான் இது குறித்து கருத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்நிகழ்ச்சிக்கு முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறர்கள்.