Home நாடு ஜோகூர்: ரேபிட் பெட்ரோலிய சுத்திகரிப்பு இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு 80 கிமீ வரையிலும் உணரப்பட்டது!

ஜோகூர்: ரேபிட் பெட்ரோலிய சுத்திகரிப்பு இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு 80 கிமீ வரையிலும் உணரப்பட்டது!

826
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பெங்கெராங்கில் அமைத்துள்ள, பெட்ரோனாஸுக்குச் சொந்தமான பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதிமம் சுத்திகரிப்பு மேம்பாட்டு திட்டத் (ரேபிட்) வெடிப்புச் சம்பவம் நடதுள்ளதாக பெட்ரோனாஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாலை மணி 1.28-க்கு இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து 30  நிமிடத்தில் எங்களது அவசர மற்றும் பாதுகாப்புக் குழு அப்பகுதிக்குச் சென்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தன. மேலும், இது குறித்து நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்து விட்டோம்” என செய்தி அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது நாங்கள் கூடுதல் தகவல்களை வழங்குவோம்எனவும் பெட்ரோனாஸ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எரிவாயு தொட்டி கசிவுக் காரணமாக தீ மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தினால் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாசிர் கூடாங்கிலும் மக்கள் இந்த வெடிப்பின் அதிர்வை உணர முடிந்ததாகக் கூறியுள்ளனர்.