Home நாடு பேராக் மஇகா பிரமுகர் தங்கராஜ் மறைவு

பேராக் மஇகா பிரமுகர் தங்கராஜ் மறைவு

1233
0
SHARE
Ad

ஈப்போ – பேராக் மாநில மஇகாவில் நீண்ட காலமாக சேவை செய்து வந்துள்ள வழக்கறிஞர் கே.தங்கராஜ் இன்று காலமானார்.

பேராக் மாநில மஇகாவில் பல்வேறு பதவிகள் வகித்துள்ள தங்கராஜ் மாநிலச் செயலாளராகவும், பாசிர் சாலாக் மஇகா தொகுதி தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

மஇகா மத்திய செயலவையின் முன்னாள் உறுப்பினருமான தங்கராஜ் வயிற்று நோய் காரணமாக இன்று திங்கட்கிழமை (15 ஏப்ரல் 2019) காலமானார்.

#TamilSchoolmychoice

அவரது இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.15 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

No 351, Lorong 23, Jalan Kg Banjar, Taman Banjar Jaya,

36000 Teluk Intan, Perak.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள:

திரு இராஜன் – மஇகா பாசிர் சாலாக் தொகுதி தலைவர்

கைத்தொலைபேசி – 016 -8879972

திரு தினேஷ் – 011-16491972