Home நாடு கொழும்பு தாக்குதலுக்குப் பிறகு மலேசிய வழிபாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு!

கொழும்பு தாக்குதலுக்குப் பிறகு மலேசிய வழிபாட்டு தலங்களில் தீவிர பாதுகாப்பு!

701
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: கொழும்பு குண்டு வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தின் அனைத்து மாவட்ட காவல் துறையினரையும், அம்மாநிலத்தின் அனைத்து நுழைவாயில்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளதாக ஜோகூர் மாநில காவல் துறை துணைத் தலைவர் டத்தோ முகம்ட காமாருட்டின் கூறினார்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் ரோந்து பணியையும், கட்டுப்பாட்டினை தீவிரப்படுத்தவும் ஆணையிட்டுள்ளேன். இன்று வரை நாங்கள் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் பெறவில்லை என்றாலும், பாதுகாப்பு பணிகள் தொடரப்படும்” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.