Home நாடு சண்டாக்கான்: ஐக்கிய சபா கட்சி போட்டி!

சண்டாக்கான்: ஐக்கிய சபா கட்சி போட்டி!

965
0
SHARE
Ad

சண்டாக்கான்: வருகிற மே 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் ஐக்கிய சபா கட்சியைப் பிரதிநிதித்து லிண்டா சென் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் மாக்சிமஸ் ஒங்கிலி அறிவித்தார்.

64 வயதுடைய லிண்டா, கடந்த 2010-ஆம் ஆண்டு பத்து சாபி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் ஆவார். அவரது கணவரான முன்னாள் பத்து சாபி நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சோங் ஒரு விபத்தில் காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

முன்னதாக, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பொங் மொக்தார் ராடின், அம்னோ கட்சி ஐக்கிய சபா கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என கூறியிருந்தார். இது தொடர்பாக தாம் ஒங்கிலியிடம் பேசிவிட்டதாக அவர் கூறினார்.