Home உலகம் இலங்கை அம்பாறையில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு பிரிவு துப்பாக்கிச் சூடு

இலங்கை அம்பாறையில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு பிரிவு துப்பாக்கிச் சூடு

802
0
SHARE
Ad

கொழும்பு – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இலங்கையின் அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின்போது ஒருசில தரப்பினர் பாதுகாப்பு பிரிவினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் சோதனை நடவடிக்கையின்போது வெடிகுண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாகவும், அதைத் தொடர்ந்து மூன்று வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் மேலும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அம்பாறை பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான அளவில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், பயங்கரவாதம் தொடர்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பது இலங்கை முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரவச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளுக்குப் பின்னணியில் மிகப் பெரிய பயங்கரவாதப் பின்னல் இருப்பதை விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் விதிக்கப்பட்ட ஊரடங்கு அகற்றப்பட்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை, இரவு 10 மணி முதல் நாளை சனிக்கிழமை, காலை 4 மணி வரை இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.