Home நாடு ஐஜிபி: 2 ஆண்டுகளுக்கு காவல் துறை தலைவராக அப்துல் ஹாமிட் நியமனம்!- மொகிதின் யாசின்

ஐஜிபி: 2 ஆண்டுகளுக்கு காவல் துறை தலைவராக அப்துல் ஹாமிட் நியமனம்!- மொகிதின் யாசின்

716
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடப்பு காவல் துறைத் தலைவரான (ஐஜிபி) டான்ஸ்ரீ புசி ஹருண் பதவி விலகிச் செல்வதால் அவருக்குப் பதிலாக புதிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பாடோர் நியமிக்கப்படுவதாக பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருந்தார்.

நாளை வெள்ளிக்கிழமை தற்போதைய காவல் துறைத் தலைவரான முகமட் புசி ஹருணின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பாடோர் நியமிக்கப்படுவார் என குறிப்பிடப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின், ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு காவல் துறைத் தலைவராக அப்துல் ஹாமிட் பதவி ஏற்பார் எனக் கூறியுள்ளார்.

காவல் துறை படிநிலைப்படி, இரண்டு நபர்களால் இந்த பதவியினை ஏற்கலாம் எனும் ஆருடங்கள் கூறப்பட்டு வந்த வேளையில், நேற்று புதன்கிழமை அப்துல் ஹாமிட் தலைவர் பதவியை ஏற்பார் என பிரதமர் கூறியிருந்தார்.

நாளை வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் புலாபோல் காவல் துறை பயிற்சி மையத்தில் அவர் பதவி ஏற்பார் எனவும், மாலையில் தற்போதைய காவல் துறைத் தலைவர்  முகமட் புசி ஹருண் பிரியாவிடை விழாவில் கலந்துக் கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல் துறை துணைத் தலைவர் பதவிக்கு டத்தோஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.