கோலாலம்பூர்: இனம் மற்றும் மதத்தினை முன்னிலைப்படுத்தி, அரசியல் இலாபத்திற்காக அவற்றை பயன்படுத்தி மக்களை திசைத் திருப்பும் அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் தற்போதைய கூட்டு சேர்க்கை ஆபத்தானது என பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப் கூறியுள்ளார்.
இவ்விரண்டு கட்சிகளும் இனத்தையும், மதத்தையும் வைத்து அரசியல் நடத்துவதோடு இல்லாமல், அதனை பயன்படுத்தி ஆபத்தான சூழலை ஏற்படுத்த முற்படுகின்றன என அவர் கூறினார்.
“தற்போது அரசியல் எனும் பெயரில் இவ்விரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து விட்டன.இந்நாட்டின்ஒற்றுமையைமீட்டெடுப்பதற்கானமுயற்சிகளில் தோல்வியைக் கண்டுவிடுவோமோ என்ற அச்சம் எழுந்துள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
இது ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது எனக் கூறிய முஜாஹிட், அம்னோ–பாஸ் கட்சிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பு கேமரன் மலை இடைத் தேர்தலில் தொடங்கி, செமினி, ரந்தாவில் வெற்றியைத் தந்துள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் மலாய் மற்றும் இஸ்லாமிய விவகாரங்களை முன்னிலைப் படுத்தி இந்த தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுள்ளன என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்காது என அவர் கூறினார்.
மக்களிடத்தில் இவ்வாறான மனப்பான்மையை மாற்றுவதற்கு இன்னும் ஒரு தலைமுறைக்காவது காத்திருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.