புளோரிடா: 100-க்கும் அதிகமானோர் பயணித்த போயிங் 737 ஜெட் விமானம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி), ஓடுபாதையை விட்டு வெளியேறி புளோரிடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் ஆற்றில் இறங்கியது. பெரிய அளவிலான மீட்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் எந்த ஒரு உயிர் பாதிப்பும் ஏற்படவில்லை என மீட்பு குழுவினர் உறுதிபடுத்தி உள்ளனர். இவ்விமானத்தில் சுமார் 142 பயணிகள் பயணித்தகாக உள்ளூர் ஊடகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
கியூபாவில் உள்ள குவாண்டானமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானம், ஜாக்சன்வில் கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது இந்த சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின் போது விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.