Home நாடு ஜோ லோ: 39 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள தமது வீட்டை விற்க சம்மதம்!

ஜோ லோ: 39 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள தமது வீட்டை விற்க சம்மதம்!

642
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சலஸ்: லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் அமைந்துள்ள 39 மில்லியன் டாலர் (161 மில்லியன் ரிங்கிட்) பெறுமானமுள்ள தனது சொகுசு வீட்டினை விற்பதற்கு சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வீடானது 1எம்டிபி நிதியின் மூலம் பெற்றப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

கலிபோர்னியா மத்திய மாவட்ட அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்க வழக்கறிஞர்கள் மற்றும் ஜோவின் பிரதிநிதிகள் அவ்வீட்டினை விற்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், அவ்வீட்டின் மீதான தனது உரிமையை ஜோ முழுவதுமாக விட்டுக் கொடுப்பதாக இது அர்த்தமாகாது என கூறப்பட்டுள்ளது. 

#TamilSchoolmychoice

மாறாக, அவ்வீடு சீர்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், எதிர்காலத்தில் எந்த விதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் இருப்பதற்காக அது விற்கப்படுவதற்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும்,  270 நாட்களுக்குள் அவ்வீடானது விற்க முடியாமல் போனால், அமெரிக்க அரசாங்கம் அதன் விருப்பப்படி ஒரு முகவரரை நியமிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.