Home 13வது பொதுத் தேர்தல் நாளை கெடா மந்திரி புசார் கோலாலம்பூரில் சுல்தானை சந்திக்கவுள்ளார்

நாளை கெடா மந்திரி புசார் கோலாலம்பூரில் சுல்தானை சந்திக்கவுள்ளார்

702
0
SHARE
Ad

azizanஅலோர்ஸ்டார், ஏப்ரல் 3-இன்று காலையில் பேரரசர்   துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசாம் ஷாவை சந்தித்து அவரிடம் நாடாளுமன்றம் கலைப்பதற்கான சம்மதம் பெற்றவுடன் நாடாளுமன்றத்தைக்  கலைத்ததாக நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் அவரது அறிவிப்பு நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை  கெடா மாநில மந்திரி புசார், டத்தோஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் கெடா மாநில சுல்தான் துவாங்கு அப்துல் ஹலிம் முஹாசம் ஷாவை கோலாலம்பூரில் உள்ள இஸ்தானாவில் சந்திக்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

கெடா சட்டமன்றத்தை கலைப்பது குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.