Home 13வது பொதுத் தேர்தல் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயார்

தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் தயார்

625
0
SHARE
Ad

hadi-awangகோலாலம்பூர், ஏப்ரல் 3- இன்று புதன்கிழமை காலை 11.30 மணியளவில் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக பிரதமர்  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  அதிகாரபூர்வமாக அறிவித்தைத் தொடர்ந்து, எதிர்கட்சியினர் 13ஆம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

13ஆவது தேர்தலை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தயார் நிலையில் இருப்பதாக பாஸ் கட்சியின்  துணைத்தலைவர் டத்தோ மஃபுஸ் ஓமார் கூறினார்.

tian-chuvaவேட்பாளர்கள்  பட்டியல்கள் 100 விழுக்காடு தயார் நிலையில் இருப்பதாகவும் பெரும்பான்மையினர் புதுமுகங்கள் ஆகும் என்று பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் (படம் ) குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என்று பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் தியான் சுவா (படம்- இடது) கூறினார்.

lokeமாநில மந்திரி புசார், முதலமைச்சர்கள், சுல்தான்கள்  மற்றும் மாநில தலைவர்கள் மாநில சட்டமன்றத்தை கலைப்பார்கள் என்று காத்திருந்தோம் என்று மேலும் அவர் சொன்னார்.

இன்று நாடாளுமன்றம் கலைத்தது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. கூடிய விரைவில் பொதுக்கூட்டம் ஒன்றில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்களை அறிவிப்போம் என ஜ.செ.க வின் அமைப்புச் செயலாளர், அந்தோணி லோக் சியூ வூக் (படம்- வலது) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஆதிக்கத்தின் கீழ் கிளந்தான், கெடா, சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய நான்கு மாநிலங்களும் அடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.