Home இந்தியா மக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை!

மக்களவை தேர்தலில் கமல் ஹாசன், சீமான் கட்சிகளுக்கு அங்கீகாரம் இல்லை!

1102
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவின் 17-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருகையில், பாஜக இந்திய அளவில் முன்னிலையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு போதிய வாக்குகள் மக்களிடமிருந்து பெறாதது தெரிய வந்துள்ளது. மக்களிடமிருந்து போதிய அங்கீகாரம் கிடைக்காததை இது நிரூபனம் செய்வதாக அமைகிறது.

தமிழகத்தின் எந்தவொரு மக்களவை தொகுதியிலும் இவ்விரு கட்சிகளும் முன்னிலைக்கு வரவில்லை என்பது தெளிவாகிறது. ஆரம்பக் கட்டத்திலிருந்தே இவ்விரு கட்சிகளும் போதிய மக்கள் ஆதரவைப் பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.