Home இந்தியா இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 306; பாஜக கூட்டணி 355;...

இந்தியத் தேர்தல்: 542 தொகுதிகள் – பாஜக (தனித்து): 306; பாஜக கூட்டணி 355; காங்கிரஸ் (தனித்து): 49; காங்கிரஸ் கூட்டணி: 89; மற்றவை: 98

1129
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 9.30 மணி நிலவரம்) 7 கட்டங்களாக நடத்தப்பட்ட இந்தியப் பொதுத் தேர்தலில் 542 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் அளவுக்கு பாஜக கூட்டணி வெற்றி நடை போடுகிறது.

இந்த முறை தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்பட்டதால், மொத்தம் 542 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்திய நாடாளுமன்றம் மொத்தம் 545 தொகுதிகளைக் கொண்டதாகும். இதில் இரண்டு தொகுதிகளுக்கு ஆங்கிலோ இந்தியர்கள் தேர்தலின்றி இந்திய அதிபரால் நேரடியாக நியமிக்கப்படுவர்.

#TamilSchoolmychoice

எஞ்சிய 543 தொகுதிகளுக்கு பொதுத் தேர்தல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதுவரை வெளியாகியிருக்கும் முடிவுகளின் அடிப்படையில் பாஜக தனித்த கட்சியாக 306 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்திருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டாவது தவணையிலும் வெற்றி பெற்றது ஒருபுறமிருக்க, எத்தனையோ எதிர்ப்புகள், சாடல்கள், கண்டனங்கள் – இவற்றுக்கு மத்தியிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி 355 தொகுதிகளை வென்றிருக்கிறது. இதன்மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அளவுக்கு பாஜக கூட்டணி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இந்தியாவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற 363 தொகுதிகள் பெற்றிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் தொகுதிகளை வெல்ல முடியவில்லை என்றாலும், ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைப் பெறுவதன் மூலம் பாஜக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற முடியும்.