புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 10.30 மணி நிலவரம்) இன்று இந்திய நேரப்படி மாலை 7.00 மணிக்கு நரேந்திர மோடி பிரதமராக இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் அதிபர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிம்ஸ்டெக் எனப்படும் அணியைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், மொரிஷியஸ், கிரிக்ஸ்தான் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 6 ஆயிரம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நடிகர் ரஜினி காந்த் ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
மோடியைத் தொடர்ந்து அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் வரிசைக்கிரமமாக பின்வருமாறு:
- ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்)
- அமித் ஷா (குஜராத்)
- நிதின் ஜெயராம் கட்கரி (மகாராஷ்டிரா)
- சதானந்தா கௌடா (கர்நாடகா)
- நிர்மலா சீதாராமன் (நாடாளுமன்ற மேலவை – ராஜ்ய சபா உறுப்பினர்)
- ராம்விலாஸ் பஸ்வான் (பீகார்)
- நரேன்சிங் தோமர்
- ரவிசங்கர் பிரசாத் (பீகார்)
- ஹர்சிம்ரத் பாதல் (பஞ்சாப்)
- தாவர் சந்த் கெலோட்
- சுப்ரமணியம் ஜெய்சங்கர் (முன்னாள் வெளியுறவு செயலாளர்)
- டாக்டர் ரமேஷ் பொக்ரியால் (உத்தரகாண்ட்)
- அர்ஜூன் முண்டா (ஜார்கண்ட்)
- ஸ்மிரிதி இரானி (உத்தரப் பிரதேசம்)
- டாக்டர் ஹர்ஷ்வர்தன்
- பிரகாஷ் ஜவடேகர்
- பியூஷ் கோயல்
- தர்மேந்திர பிரதான் (பீகார்)
- முக்தார் அபாஸ் நக்வி
- பிரகலாத் ஜோஷி (கர்நாடகா)
- டாக்டர் மகேந்திராநாத் பாண்டே (உத்தரப் பிரதேசம்)
- டாக்டர் அர்விந்த் கண்பத் சாவந்த் (சிவசேனா – மகாராஷ்டிரா)
- கிரிராஜ் சிங்
- கஜேந்திர சிங் செகாவத்
- சந்தோஷ்குமார் கங்வார்
(மேலும் விவரங்கள் தொடரும்)