Home நாடு 1எம்டிபி தொடர்பான பறிமுதல் வழக்கை சந்திக்க அம்னோ தயார்!- முகமட் ஹசான்

1எம்டிபி தொடர்பான பறிமுதல் வழக்கை சந்திக்க அம்னோ தயார்!- முகமட் ஹசான்

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ கட்சிக்கு கிடைத்ததாகக் கூறப்படும் 1எம்டிபி தொடர்பான பணத்தை மீட்டெடுக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தாக்கல் செய்துள்ள பறிமுதல் வழக்கை எதிர்கொள்வதற்கு அம்னோ தயாராக உள்ளது என்று அதன் இடைக்காலத் தலைவர் முகமட் ஹாசன் தெரிவித்தார்.

அம்னோவின் கணக்கு முடக்கப்பட்ட பின்னர் உழல் தடுப்பு ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

இதுதான் நடைமுறை, ஒரு வருடம் கழித்து, அவர்கள் பணத்தை விண்ணப்பிக்கிறார்கள். எனவே, எம்ஏசிசி சட்டபடி நடைமுறைகளை செய்து வருகிறது” என்று முகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

​​”ஏன் அப்பணத்தை எங்களிடமே திருப்பித் தர வேண்டும் என்று அம்னோ வாதிட வேண்டும், நாங்கள் அதனை செய்வோம்என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எனவே ஒரு வருடம் முடிந்தவுடன் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தங்களது வாதத்தை சமர்ப்பிப்பார்கள். யாருக்கு நல்ல முடிவுகளை வழங்க முடியும் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.