Home நாடு பாசிர் கூடாங் வட்டாரப் பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன

பாசிர் கூடாங் வட்டாரப் பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன

728
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – பாசிர் கூடாங் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் இராசயன சுற்றுச் சூழல் மாசு காரணமாக அந்தப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாசிர் கூடாங் வட்டாரத்தில் கல்வி அமைச்சிடம் பதிவு பெற்ற 475 கல்வி நிலையங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 111 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளாகும். மூன்று உயர்கல்விக் கூடங்களும், 14 தனியார் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளும், 347 பாலர் பள்ளிகளும் அந்த வட்டாரத்தில் இயங்கி வருகின்றன.

இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு வியாழக்கிழமை வரை இந்தப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். இந்த காலகட்டத்தில் அங்கு ஏற்பட்டிருக்கும் சுற்றுச் சூழல் மாசுபாட்டைத் தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு உதவியாக இருக்கும் பொருட்டு பள்ளிகள் மூடப்படுகின்றன என மாநில கல்வி இலாகாவின் அஸ்மான் அட்னான் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இன்று வரையில் 30 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காற்றின் தூய்மைக் கேட்டினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். கடந்த ஜூன் 20 முதல் இந்தப் பிரச்சனை அந்த வட்டாரத்தை உலுக்கி வருகிறது.