Home நாடு “நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்

“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்

720
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார்.

நான் மூன்று வருடங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அதற்குள் வேலையைச் சரிசெய்ய வேண்டும்” என்று அவர் நேற்று திங்கட்கிழமை கூறினார். 

“மூன்று ஆண்டுகளுக்கு அப்பால் இந்த பதவியை நான் வகிக்க மாட்டேன்” என்று பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேசிய கடன் பிரச்சனை தீர்க்கப்படும் வரை இப்பதவியில் தாம் பணியாற்றப்போவதில்லை என்றும், மாறாக ஓய்வு பெற்ற பின்னரும் மலேசியாவை இந்த கடன் சிக்கலிலிருந்து காப்பாற்ற உதவுவதற்கு முன்னுரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, நேற்று பிரதமர் மூன்று ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியை வகிப்பார் என்று செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் கருத்துகளை சமூகப் பக்கங்களில் பதிவிடத் தொடங்கினர். அண்மையக் காலமாக பிரதமர் பதவியினை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் எப்போது வழங்கப்படும் என்ற கருத்துகள் வலுத்த வண்ணமாக உள்ளன.