Home நாடு அமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்

அமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்

718
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அமைதிப் பேரணி நடத்த விரும்புபவர்கள் இனிமேல் அதற்கென அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இரண்டு இடங்களில் மேற்கொள்ளலாம். நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகில் உள்ள பாடாங் மெர்போக் மைதானம், டத்தாரான் மெர்டேக்காவை உள்ளடக்கிய ஜாலான் ராஜா பகுதி ஆகியவையே அந்த இரண்டு வளாகங்களாகும்.

உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் இந்த அறிவிப்பை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். அமைதிப் பேரணி சட்டம் 2019 மீதான சட்டத்திருத்தங்களைச் சமர்ப்பித்து உரையாற்றும்போது அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அதன்படி மேற்குறிப்பிட்ட இரண்டு இடங்களிலும் இனி அமைதிப் பேரணி நடத்த விரும்புபவர்கள் காவல் துறையின் முன் அனுமதியை இனி பெறவேண்டியதில்லை. எனினும் அந்த இடங்களுக்கான உரிமையாளர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

#TamilSchoolmychoice

தற்போது பகாங் மாநிலத்தில் உள்ள டாருல் மாக்முர் அரங்கம் இதுபோன்ற பேரணிக்கான இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 8,668 ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. இந்த ஆண்டில் மே 2019 வரை 1,592 ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.