Home நாடு 4 நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கம் 5.3 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்கிறது!

4 நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கம் 5.3 பில்லியன் ரிங்கிட்டை சேமிக்கிறது!

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நான்கு நெடுஞ்சாலைகளை வாங்குவதன் மூலம் அரசாங்கத்தால் 5.3 பில்லியன் ரிங்கிட் சேமிப்பைப் பெற முடியும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆண்டுக்கு 180 மில்லியன் ரிங்கிட் வரையிலும் சேமிக்க முடியும், ஏனெனில் நெரிசல் கட்டணங்களால் சுங்கக் கட்டண விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

முன்னதாக, டாமான்சாரா பூச்சோங் நெடுஞ்சாலை (எல்டிபி), மேற்கு கோலாலம்பூர் போக்குவரத்து சீரமைப்பு அமைப்பு (ஸ்பிரிண்ட்), ஷா அலாம் நெடுஞ்சாலை (கெசாஸ்) மற்றும் ஸ்மார்ட் சுரங்கப்பாதை ஆகியவற்றை வாங்குவதற்காக அரசாங்கம் காமுடா பெர்ஹாட்டிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது.

#TamilSchoolmychoice

ஆயிர் ஹீத்தாம் நாடாளுமன்ற உறுப்பினர் வீ கா சியோங்கின் கேள்விக்கு பதிலளித்த போது லிம் இவ்வாறு கூறினார்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, குறிப்பிடப்பட்ட அந்நான்கு நகர் பகுதி சுங்கச்சாவடி நெடுஞ்சாலைகளும் 48 விழுக்காடு பங்குகளை வைத்திருப்பதை லிம் வெளிப்படுத்தினார்.