Home நாடு பேராக்: ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு!

பேராக்: ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஒத்திவைப்பு!

680
0
SHARE
Ad

ஈப்போ: வருகிற ஜூலை 11-ஆம் தேதி திட்டமிடப்பட்ட பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மற்றும் நியமனம் குறிப்பிடப்படாத தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுல்தான் நஸ்ரின் ஷா ஆணைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒத்திவைப்பிற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை. ஆயினும், பணிப்பெண் ஒருவர் ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியதை அடுத்து, பேராக் மாநில காவல் துறை அது குறித்து விசாரித்து வருவதற்கும் இந்த ஒத்திவைப்பிற்கும் சம்பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வு பிரிவு (டி11) புக்கிட் அமான் உதவி இயக்குனர் சூ லில்லி இதனை உறுதிபடுத்தியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஜசெக சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை காவல்துறை பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.