கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தமான ஓரினச் சேர்க்கை காணொளியை பரப்பிய சூத்திரதாரிக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது நாம் விரும்பும் அரசியல் அல்ல என்று குறிப்பிட்டார்.
ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து வினவிய போது, “நான் புலனாய்வாளர் அல்ல.” என்று மகாதீர் பதிலளித்தார்.
அதிகாரிகள் தங்களின் விசாரணையை முடிப்பதற்கு முன்பதாகவே ஓரினச் சேர்க்கை காணொளியை போலி என்று தாம் நிராகரித்த போது அது அஸ்மினுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படுவதை மகாதீர் மறுத்தார்.
இதே போன்றதொரு சம்பவத்தில் 1998-ஆம் ஆண்டு முரண்பாடாக, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை, அப்போது பிரதமராக இருந்த மகாதீர், அவரை துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.