Home நாடு பாசிர் கூடாங்: புறாக்களின் எச்சம் மூச்சுத் திணறலுக்கு காரணமா?

பாசிர் கூடாங்: புறாக்களின் எச்சம் மூச்சுத் திணறலுக்கு காரணமா?

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் தேசியப் பள்ளி மாணவர்களின் மூச்சுத் திணறலுக்குப் பின்னால் புறாக்களின் எச்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் கூற்றை சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் மறுத்துள்ளார்.

அமைச்சு அதன் சொந்த கண்டுபிடிப்புகளை மட்டுமே சார்ந்திருக்கும் என்று அவர் கூறினார்.

முன்னதாக ஜோகூர் மாநில சுகாதார மற்றும் கலாச்சாரக் குழுத் தலைவர் முகமட் குசான் அபுபக்கர் கூறிய கூற்றுக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

#TamilSchoolmychoice

நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து பொதுமக்களுக்கு இது குறித்து அறிவிப்போம்என்று இன்று வியாழக்கிழமை அவர் கூறினார்.

கடந்த ஜூலை 23-ஆம் தேதி, குசான் பறவைகளின் எச்சங்கள் பள்ளி மாணவர்களின் மூச்சுத் திணறலுக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.