Home நாடு அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு சாசனம் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடப்படும்!

அம்னோ- பாஸ் ஒத்துழைப்பு சாசனம் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடப்படும்!

799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் பாஸ் கட்சித் தலைவரான அப்துல் ஹாடி அவாங் ஆகியோருக்கு இடையில் வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி ஒத்துழைப்பு சாசனம் கையெழுத்திடப்படவுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிணைந்த அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இது அமைகிறது.

கையெழுத்திடும் விழா புத்ரா உலக வணிக மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்தில் நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இரண்டு பெரிய மலாய் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து நடந்த இடைத் தேர்தல்களில் அமோக வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.