Home நாடு பார்ஹாஷ், அமிருடினுக்கு பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பும்!

பார்ஹாஷ், அமிருடினுக்கு பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு எச்சரிக்கை கடிதம் அனுப்பும்!

961
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த அவரவர் அறிக்கைகளைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு கடிதம் அனுப்பும் என்று கட்சி வட்டாரம் குறிப்பிட்டதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மற்றும் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் ஆகியோரும் அடங்குவர்.

சொற்களிலும் செயல்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுவதோடு மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகளையும் தெளிவுபடுத்த வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இருப்பினும், இந்த கடிதம் ஒரு காரணக் கடிதமாக கருதப்படாது என்று வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது.