Home உலகம் பிரிட்டனின் புதிய அமைச்சரவை: உள்துறை அமைச்சராக இந்தியர் – நிதியமைச்சர் முஸ்லீம்

பிரிட்டனின் புதிய அமைச்சரவை: உள்துறை அமைச்சராக இந்தியர் – நிதியமைச்சர் முஸ்லீம்

904
0
SHARE
Ad

இலண்டன் – புதிய பிரதமராக நேற்று புதன்கிழமை முதல் பதவியேற்றுள்ள போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் அதிரடி திருப்பங்களை அறிவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை தனது புதிய அமைச்சரவையின் அமைச்சரவைக் கூட்டத்தை த்திற்கும் அவர் தலைமை தாங்கி நடத்தினார்.

புதிய உள்துறை அமைச்சர் ஓர் இந்தியப் பெண்மணி

பிரிட்டனின் புதிய உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல்

புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் 47 வயது பெண்மணி பிரித்தி பட்டேல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். பிரிட்டனில் அதிகமாக இந்தியர்கள் குடியேறுகிறார்கள் என்ற புகார்கள் நிலவி வரும் காலகட்டத்தில் பிரிட்டனின் குடிநுழைவுத் துறையை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சுக்கு ஓர் இந்தியரே அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

பிரிட்டனின் புதிய நிதியமைச்சர் சஜித் ஜாவித்

அதே வேளையில் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சஜித் ஜாவித் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீமாவார். இவரது தந்தை பாகிஸ்தானிலிருந்து வந்து இலண்டனில் ஒரு பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றியர்.

#TamilSchoolmychoice

ஒரு சிறந்த வங்கியாளராக, ஆண்டுக்கு 3 மில்லியன் பவுண்டுகள் பெறக் கூடிய பதவியை விட்டு விட்டு அரசியலில் ஈடுபட்ட சஜித் தற்போது நிதியமைச்சராகியிருக்கிறார்.

வெள்ளையர் அல்லாதவர்கள் உள்துறை அமைச்சுக்கும், நிதியமைச்சுக்கும் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை எனக் கருதப்படுகிறது.

பிரிட்டனின் அனைத்துலக மேம்பாட்டு அமைச்சர் அலோக் சர்மா

மேலும் அனைத்துலக மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் அலோக் சர்மாவும் ஓர் இந்திய வம்சாளி நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் தாஜ்மஹால் அமைந்திருக்கும் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவராவார்.