Home One Line P1 உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’

உப்சி வளர்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’

1769
0
SHARE
Ad

தஞ்சோங் மாலிம் –  உப்சி (UPSI) எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் வளர்தமிழ் மன்றத்தின் முயற்சியில் இரண்டாவது முறையாகப்  2019-ஆம் ஆண்டுக்கான “நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி” நடத்தப்பட்டிருக்கிறது.

இதனை முன்னிட்டு ‘நல்லார்க்கினியன் மரபு கவிதை விழா’ எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் நாள் மைய அரங்கம், பழைய வளாகம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் (AUDITORIUM UTAMA, KAMPUS SULTAN ABDUL JALIL SHAH,UPSI) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை நடைபெறவிருக்கிறது.

மலேசியாவில் மரபு கவிதை மீண்டும் செழித்தோங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கவிதைப் போட்டியும், விழாவும் நடத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

நம் நாட்டில் மரபு கவிதைத் துறை செழித்தோங்க பெரும் பங்காற்றிய இறையருட் கவிஞர் அமரர் செ.சீனி நைனா முகம்மது அவர்களை நினைவுகூரும் வகையில் அவரது புனைப் பெயரான ‘நல்லார்க்கினியன்’ என்ற பெயரில் இந்தக் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.

மரபு கவிதை விழாவில் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு அங்கமும், மூத்த கவிஞர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சியும் இடம்பெறும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து பயன்பெறுமாறு பொதுமக்களை ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேல் விவரங்களுக்கு:

சரண்ராசு – 010 4643476

வினோதினி –     010 346 6822

 

‘மரபு கவிதையே தமிழ் இலக்கியத்தின் வேர்’’

‘இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்”