Home One Line P1 தமிழீழ விடுதலைப் புலிகள்: ஒருவர் இலங்கை தூதரகத்தை தாக்கத் திட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகள்: ஒருவர் இலங்கை தூதரகத்தை தாக்கத் திட்டம்!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மேலும் கைது செய்வார்கள் என்று காவல் துறை கூறியுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எவருடனும் சமரசம் செய்யப்படாது என்றும் அது எச்சரித்துள்ளது.

புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு சிறப்பு கிளையின் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை, ​​பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆறு மாநிலங்களில் நடந்த ஒரு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் தொடர்பாக மொத்தம் ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக இன்று வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது அறிவித்தார்.

அவர்களில் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார். அவர்கள் அந்த அமைப்பை மேம்படுத்துவதில் சந்தேகத்திற்கிடமான பங்கைக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகக் கட்டிடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்தவும் திட்டமிட்டிருந்த ஒரு காப்பீட்டு முகவரும் கைது செய்யப்பட்டார் என்று அயோப் கூறினார்.

காப்பீட்டு முகவர் மற்றொரு புலிகள் ஆதரவாளருடன் தாக்குதலைத் திட்டமிட்டு வந்தார் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு நவம்பர் முதல் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்ததாகவும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்ததாகவும் அயோப் செய்தியாளர்களிடம் கூறினார்.